வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (15:53 IST)

கன்னி: ஆவணி மாத ராசி பலன்கள்

(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரகநிலை: சுக  ஸ்தானத்தில்  கேது, குரு (வ), சனி (வ) -  அஷ்டம ஸ்தானத்தில்  செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில்  ராஹூ, சுக்ரன்  - லாப ஸ்தானத்தில்  சந்திரன் - விரைய ஸ்தானத்தில்  புதன், சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 
 
பலன்:
உழைப்பினால் வாழ்வில் வளம் பெறும் கன்னி ராசியினரே நீங்கள் உணவிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த மாதம்  எதிலும் கவனமாக இருப்பது நன்மை  தரும். சுக்கிரன் சஞ்சாரம் பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். 
 
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
 
உத்திரம்:
இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
 
ஹஸ்தம்:
இந்த மாதம் முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.
 
சித்திரை:
இந்த மாதம் மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க  வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். 
 
பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி; 
சந்திராஷ்டம தினங்கள்:  செப்டம்பர் 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்ட் 30, 31.